பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்

பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்

பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2019 | 4:09 pm

Colombo (News 1st) பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் செய்துள்ளதால், இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய, ஆளுங்கட்சியிலுள்ளவர்களின் பாராளுமன்ற சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆளும் கட்சியின் ஆசன பங்கீடு முன்னெடுக்கப்படும் எனவும் படைக்கல சேவிதர் கூறினார்.

பாராளுமன்ற சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் எதிர்கட்சியினருக்கும் ஆசன ஒதுக்கீடு முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் தடவையாக பாராளுமன்றம் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்