தமது கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் ரணில் கோரிக்கை

தமது கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் ரணில் கோரிக்கை

தமது கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் ரணில் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2019 | 8:29 pm

Colombo (News 1st) தமது கட்சியினருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியல் விடயங்களை முன்நிறுத்தி நாட்டில் எந்தவொரு குழப்ப நிலையும் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்