அனைத்து மாவட்டங்களிலும் படையினரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் படையினரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் படையினரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2019 | 8:16 pm

Colombo (News 1st) நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டத்திற்கமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் 25 நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியைப் பாதுகாப்பதற்காக, முப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்