2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது

2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது

2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2019 | 6:33 pm

Colombo (News 1st) சுமார் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில் ஒன்றில் காணாமற்போன இரண்டு வலம்புரி சங்குகளை தேடிக்கொடுத்தல் மற்றும் ஆலயத்தின் பணிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி முன்னெடுப்பதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகரால் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

குறித்த ஆலய வளாகத்தில் இலஞ்சம் பெற்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்