லலித் வீரதுங்கவின் வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்

லலித் வீரதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

by Staff Writer 22-11-2019 | 4:20 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி செயலாளரான லலித் வீரதுங்கவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை நீக்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லலித் வீரதுங்க, ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர, ருவன் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த கோரிக்கை இன்று விடுக்கப்பட்டது. இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் கட்டளைகளை இரத்து செய்யுமாறு கோரி லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கவும் நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.