மசாலா பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழ்

மசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

by Staff Writer 22-11-2019 | 4:13 PM
Colombo (News 1st) மசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை உள்நாட்டில் மசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க ஏற்றுமதி விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்நாட்டு மசாலா உற்பத்தி பொருட்களின் தரம் தொடர்பிலான ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தன்மையை பரீட்சித்து அதற்கேற்றவாறு தரச்சான்றிதழை வழங்கி , மசாலா உற்பத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.