16 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 16 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

by Staff Writer 22-11-2019 | 3:38 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவி அதிகாரியாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் அடங்கலாக 16 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.திலகரத்ண குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.