அமைச்சுப் பொறுப்பு தேவையில்லை

அமைச்சுப் பொறுப்பு தேவையில்லை: உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 22-11-2019 | 5:03 PM
Colombo (News 1st)  இடைக்கால அரசாங்கத்தில் தாம் அமைச்சுப் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவு வழங்கியவர்களில் அமைச்சுப் பதவியை எதிர்பார்த்த 8 அமைச்சர்கள் உள்ளதாகவும் உதய கம்மன்பில தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, மாவட்ட தலைவர்கள் சிலரும் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருந்ததாக அவர் கூறியுள்ளார். 10 பேராக அமைச்சரவையை வரையறுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என உதயகம்மன்பில தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அமைச்சரவையை திட்டமிட்ட போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்நோக்கிய சவால்களை கருத்திற்கொண்டு, அது குறித்து ஆழமாக சிந்தித்து தாம் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என தீர்மானித்ததாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.