சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2019 | 3:55 pm

Colombo (News 1st) 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு மூன்று நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதிக்கு பின்னர் பொதியிடப்பட்ட சீமெந்து மூடைகளுக்கு மாத்திரமே விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.S.M.பவுசர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 995 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூடை சிமெந்து 1,095 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே சிமெந்துக்கான விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்