காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது

காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2019 | 9:54 am

Colombo (News 1st)  காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி, பொருளாதாரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர்
  • நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்
  • ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்
  • தினேஸ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை, தொழில் உறவுகள் அமைச்சர்
  • டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்
  • பவித்திரா வன்னியாராச்சி – மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
  • பந்துல குணவர்தன – தகவல் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்
  • ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்
  • சமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்
  • டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
  • விமல் வீரவன்ச – சிறிய நடுத்தர தொழிற்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்
  • மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்
  • எஸ்.எம்.சந்திரசேன -சுற்றாடல், வனவிலங்குகள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்
  • ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்
  • பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்