கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் உண்ணாவிரதம்

கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2019 | 4:41 pm

Colombo (News 1st) கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் உண்ணாவிரதம்

சஜித் பிரேமதாசவிற்கு கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற வீரர் ஒருவரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருப்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்வியை சந்திப்பதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு வருகை தந்த சிலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் பதாதைகளை ஏந்தியவண்ணம் அங்கு குழுமியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்