அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2019 | 5:57 pm

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) மற்றும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா (Akira Sugiyama) ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கை பிரிவு பிரதி தலைமை அதிகாரியான மார்ட்டின் கெலி மற்றும் அரசியல் பிரிவு தலைமை அதிகாரி அன்டனி ரென்சுலி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் நடவடிக்கை பிரிவு பிரதி தலைமை அதிகாரியான தொஷிஹிரா கிதாமுரா மற்றும் பிரதி பொதுச்செயலாளர் தகேஷி மசகி ஆகியோரும் ஜப்பான் தூதுவருடன் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதன்போது, இருதரப்பினரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்