by Staff Writer 21-11-2019 | 7:01 PM
Colombo (News 1st) மன்னார் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சபையின் தலைவர் சாகுல் கமில் முகமட் முஜாகிரால் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
பிரதேச சபையின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி தலைவர் மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதற்கமைய, மன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபை 21 உறுப்பினர்களைக் கொண்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சி ஆதரவாளர்ளுடன் கடந்த வருடம் ஆட்சி அமைக்கப்பட்டது.