புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மோடி வாழ்த்து

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

by Staff Writer 21-11-2019 | 3:32 PM
Colombo (News 1st) பாரத பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அவர் வாழ்த்துக் கூறியுள்ளார். இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட தாம் எதிர்பார்ப்பதாகவும் பாரத பிரதமர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனூடாக எதிர்காலத்தில் வலுவான பிணைப்பை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.