பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

by Chandrasekaram Chandravadani 21-11-2019 | 1:10 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று நேரத்திற்கு முன்னர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் அவர் தற்போது கடமைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கையின் 24 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று பகல் 1 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய பிரதமர் பதவியேற்றுக்கொண்டார்.