வவுனியாவில் பெரும்போகத்தை முன்னெடுப்பதில் அசௌகரியம்

வவுனியாவில் பெரும்போகத்தை முன்னெடுப்பதில் அசௌகரியம்

வவுனியாவில் பெரும்போகத்தை முன்னெடுப்பதில் அசௌகரியம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2019 | 8:31 am

Colombo (News 1st) வவுனியா மாவட்டத்தில் வானிலை மாற்றத்தினால் பெரும்போக செய்கையை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வானிலை மாற்றத்தினால் விதைப்பு வீதம் 51 ஆக காணப்படுவதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்குரிய பெரும்போக பயிர்ச்செய்கை நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மொத்த இலக்காக 42,922 ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 27,614 ஏக்கர் விதைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 59.2 ஏக்கர் காணிகள் அழிவடைந்துள்ளதாக திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ. விஜயகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்