புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2019 | 10:09 am

Colombo (News 1st) புதிய ஆளுநர்கள் 6 பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்பிரகாரம்,

* மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக சீதா அரம்பேபொல

* தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே

* மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே

* வட மேல் ஆளுநராக A.J.M. முஸம்மில்

* சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ

* ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ராஜா கொல்லுரே

ஆகியோர் புதிய ஆளுநர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்