பாண் விலையில் மீண்டும் மாற்றம்

பாண் விலையில் மீண்டும் மாற்றம்

பாண் விலையில் மீண்டும் மாற்றம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Nov, 2019 | 9:43 am

Colombo (News 1st) உடன் அமுலாகும் வகையில் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா நிறுவனங்கள் இன்று (21) அதிகாலை முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவிற்கான விலையை குறைத்தமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் கோதுமைக்கான விலை, 8 ரூபா 16 சதத்தால் அதிகரிக்கப்பட்டது.

அதற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

எனினும், கோதுமை மாவிற்கான விலையைக் குறைப்பதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விலை அதிகரிப்பின் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட கோதுமைக்கு அறவிடப்பட்ட மேலதிக பணத்தை மீள செலுத்த நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் 5 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்