தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி TV, சிரச TV, TV1

தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி TV, சிரச TV, TV1

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2019 | 9:37 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழா தற்போது கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்று வருகிறது.

சிறந்த தொலைக்காட்சி இடைநிரப்பு நிகழ்ச்சிக்கான விருதை நியூஸ்ஃபெஸ்ட்டின் நதீக விஜயவீர பெற்றுக்கொண்டார்.

சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதை ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டின் இராஜலிங்கம் திரிஷானோ தனதாக்கிக்கொண்டார்.

சிறந்த தொலைக்காட்சி முன்னோட்டத்திற்கான விருதை சிரச TV லக்ஷபதி நிகழ்ச்சிக்காக சமித் பஸ்நாயக்க பெற்றுக்கொண்டார்.

சிறந்த நேரடி நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கான விருதை TV1-இன் தினேஷ் நயனஜித் பெற்றுக்கொண்டார்.

சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருதை சட்டன நிகழ்ச்சிக்காக சமன் தம்மிக்க சுவீகரித்துக்கொண்டார்.

இதேவேளை, சிறந்த தொலைக்காட்சி இசையாக்கல் நிகழ்ச்சிக்கான விருதை சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கே.தினேஸ்குமார் தனதாக்கிக்கொண்டார்.

சிறந்த இசை நிகழ்ச்சிக்கான (16+) விருதை சிரச தொலைக்காட்சியின் டிலான் தேவிந்த பெற்றுக்கொண்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்