ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது

ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது

ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2019 | 9:17 am

Colombo (News 1st) ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைகளின் நிமித்தம் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கிணங்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்ததாக அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணி Rudy Giuliani இடமிருந்து இதற்கான நேரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உயர்ஸ்தானிகர் Gordon Sondland தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு யுக்ரைனின் புதிய ஜனாதிபதி Volodymyr Zelensky ஐ வலியுறுத்திய ட்ரம்ப், மாற்றீடாக இராணுவ உதவிகளை வழங்க இணங்கினாரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் இலாபத்துக்காக வௌிநாட்டு உதவிகளை பெறுவது அமெரிக்காவில் சட்டவிரோதமானதாகும்.

இந்நிலையில், இந்த விசாரணைகளில் பல சாட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அரசியல் ரீதியில் கட்டமைக்கப்பட்டவை எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் உக்ரைனுக்கு ஏற்படுத்திய அழைப்பில் முறையற்ற அரசியல் கோரிக்கைகளை ட்ரம்ப் முன்வைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராயும் பொருட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக குற்றப்பிரேரணை மீதான விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, சீனாவுடன் எவ்வித வர்த்தக உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கு சீனா இணங்கவில்லை என என தெரிவித்த ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பிள் உற்பத்திகளுக்கான வரியை விலக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்