eZ Cash முறையில் ஹெரோயின் வர்த்தகம் ; இருவர் கைது

eZ Cash முறையில் ஹெரோயின் வர்த்தகம் ; இருவர் கைது

eZ Cash முறையில் ஹெரோயின் வர்த்தகம் ; இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2019 | 1:55 pm

Colombo (News 1st) eZ Cash முறையில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யல்பத்வெல பகுதியில் வசிப்பவர்களால் வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 23 பைக்கெட்கள் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலந்த மற்றும் திவ்தொடவெல பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 37 வயதான இருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் வெலிமடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்