21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி FM

21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி FM

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2019 | 9:26 pm

Colombo (News 1st) தமிழ் பேசும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த சக்தி FM இன்று தனது 22 ஆவது அகவையில் காலடி பதித்துள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வானலையில் வெற்றிவலம் வந்த சக்தி FM தமிழ் பேசும் மக்களின் செவிகளை நிறைவித்து விருந்தளித்தது.

சக்தி FM-இன் 21 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பு ஜயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வத்தளை கோகுலம் சிறுவர் இல்லத்திலுள்ள சிறார்களையும் சக்தி FM இணைத்துக்கொண்டது.

சக்தி FM-இன் பிறந்தநாள் பரிசாக பார்த்தீபா திரைப்படம் கொழும்பில் இன்று பிற்பகல் திரையிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்