by Staff Writer 20-11-2019 | 6:43 PM
Colombo (News 1st) பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் புதிய செயலாளர்கள் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றனர்.
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று காலை தனது கடமைகளை ஆரம்பித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நிதி அமைச்சில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.