கமலுடன் கை கோர்க்கத் தயார் - ரஜினி

கமலுடன் கை கோர்க்கத் தயார் - ரஜினி

by Chandrasekaram Chandravadani 20-11-2019 | 3:13 PM
தேவை ஏற்படின் உலக நாயகன் கமல் ஹாசனின் அரசியல் நடவடிக்கையுடன் கை கோர்ப்பதற்குத் தயார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தம்மிருவர் இடையே புதியதொரு இணைப்பை உருவாக்கத் தேவையில்லை எனவும் தாம் இருவரும் 44 வருட கால நண்பர்கள் எனவும் தமிழ் நாட்டின் நன்மை கருதி தாம் இருவரும் ஒன்றாக இணையவுள்ளதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த நிலையில், தேவையேற்படின் கமலுடன் கை கோர்ப்பதாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் அதிசயங்கள் இடம்பெறலாம் எனக் கூறி இரண்டு நாட்களின் பின்னர் ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.