60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி

60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி

by Staff Writer 20-11-2019 | 8:55 AM
Colombo (News 1st) இம்முறை 60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, அநுராதபுரம், மெனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் சோள உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை சேனை படைப்புழு தாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.