ஹர்ஷ டி சில்வா இராஜினாமா

ஹர்ஷ டி சில்வா இராஜினாமா

by Staff Writer 19-11-2019 | 8:20 PM
Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்தற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வளங்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி விரும்பிய தகுந்த ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பி தெரிவித்துள்ளார். இராஜினாமா கடிதத்தின் ஊடாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். 1990 சுவசெரிய மன்றத்தை ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, அந்த சேவையை பலப்படுத்துமாறு கோரியுள்ளார். ஏற்கனவே 8 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். சம்பிக்க ரணவக்க, அசோக் அபேசிங்க, மங்கள சமரவீர, கபிர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ருவன் விஜேவர்தன, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.