புதிய ஜனாதிபதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து

by Staff Writer 19-11-2019 | 7:29 PM
Colombo (News 1st)  ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமவாயத்தை அமுல்படுத்துதல், நிர்வகித்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தொடர்ந்தும் செயற்படுவது தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதி செய்து ஜனாதிபதியுடன் செயற்பட எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த முறையில் நெருக்கமாக இணைந்து செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதில் வழங்கியுள்ளார். வழங்கப்பட்டுள்ள ஜனநாயக தீர்பிற்கு அமைய, பொருளாதாரம், முதலீடு மற்றும் வர்த்தக துறையை விஸ்தரிப்பதற்கான நம்பிக்கை, நிலையான தன்மை மற்றும் எதிர்வுகூறக்கூடிய சூழலை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.