by Staff Writer 19-11-2019 | 8:46 PM
Colombo (News 1st) கேகாலை மாவட்டம் யட்டியந்தோட்டை - கனேபொல மேற்பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனேபொல மேற்பிரிவு தோட்ட லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர், தோட்ட மக்கள் மீது நேற்று (18) தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனவும், மது போதையில் இருந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கண்டி - துனிஸ்கல தோட்டத்திலுள்ள ஒருவர் மீதும் நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலையடுத்து, வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக ரங்கல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.