இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் புதிய ஜனாதிபதி

இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 19-11-2019 | 7:35 AM
Colombo (News 1st) புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (19) தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளராக கலாநிதி பீ பி ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.