by Staff Writer 19-11-2019 | 7:15 PM
Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர், அவசர விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இவருடன் இந்திய வௌிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புது டெல்லியிலிருந்து, இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.