அமேசான் காடழிப்பு வீதம் அதிகரிப்பு

அமேசான் காடழிப்பு வீதம் அதிகரிப்பு

by Staff Writer 19-11-2019 | 1:30 PM
Colombo (News 1st) அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவது கடந்த 12 மாதங்களில் 29.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரேஸில் விண்வௌி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதுவே 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிவாகிய காடழிப்பு வீதங்களில் மிகவும் அதிகமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்ட்டிலிருந்து 2019 ஜூலை வரையான காலப்பகுதியில் 9,762 சதுர கிலோமீற்றர் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்ந நிலையம் குறிப்பிட்டுள்ளது. பிரேஸில் விண்வௌி ஆராய்ச்சி நிலையத்தினால் வௌியிடப்பட்ட இந்தத் தகவல்களின் துல்லியத்தன்மை தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். இதனிடையே, பிரேஸில் ஜனாதிபதியாக வலதுசாரியான ஜெயர் பொல்சொனாரோ இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றதன் பின்பாக காடழிப்பு வீதம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்துவதிலேயே ஜனாதிபதி ஜெயார் பொல்சொனாரோ விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.