யாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

யாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

யாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2019 | 7:05 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – சுண்டிக்குளி பகுதியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 4-இல் கல்வி கற்று வந்த சுதாகரன் பென்சித் ரஜாந்தி என்ற 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்