முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2019 | 8:06 pm

Colombo (News 1st) முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தனது 88 ஆவது வயதில் இன்று மாலை இயற்கை எய்தினார்.

கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான டி.எம்.ஜயரத்ன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதியாவார்.

1994 ஆம் ஆண்டு அரச காணி, விவசாயம் மற்றும் வன வள அமைச்சராக செயற்பட்டதுடன், விவசாயம், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும், தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சராகவும் பெருந்தோட்ட அமைச்சராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக டி.எம்.ஜயரத்ன பதவியேற்றார்.

அத்துடன், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராகவும் அவர் செயற்பட்டு நாட்டிற்கு சிறந்த சேவையை ஆற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்