புதிய செயலாளர்கள் நால்வர் நியமனம்

புதிய செயலாளர்கள் நால்வர் நியமனம்

புதிய செயலாளர்கள் நால்வர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2019 | 3:27 pm

Colombo (News 1st) புதிய செயலாளர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் S.R. ஆட்டிகல நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலாளராக கலாநிதி P. B.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்