பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2019 | 8:28 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொம்பே, மல்வான பகுதியில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து, பாரிய வீடொன்றையும் நீச்சல் தடாகமொன்றையும் நிர்மாணித்து அரசாங்கத்தின் பணத்தை தவறாகக் கையாண்டமை தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் சாட்சியாளரான முதித்த ஜயக்கொடி என்ற கட்டிடக் கலை நிபுணர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

தமது தரப்பினர் சுகயீனமடைந்துள்ளதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேல் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

சாட்சியாளர் இன்மையால் வழக்கு விசாரணையை வேறொரு தினத்திற்கு மாற்றுமாறு முறைப்பாட்டுத் தரப்பை நெறிப்படுத்திய பிரதி செலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே கேட்டுக்கொண்டார்.

அதனை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்