ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Nov, 2019 | 11:08 am

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (19) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்