சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2019 | 5:33 pm

Colombo (News 1st) சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் சாங்ஷி மாகாணத்தின் பியாங்கோ கவுண்டியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென நிலக்கரி சுரங்க வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெடி விபத்திலிருந்து 11 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்