ஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு

ஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு

ஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Nov, 2019 | 8:45 am

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

மாலி மற்றும் நைகர் படையினர் இணைந்து கோ (Gao) எல்லைப் பிராந்தியத்தில் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 100 சந்தேகநபர்கள் நைகரின் ரீலோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாலி இராணுவம் அறிவித்துள்ளது.

இதேபோன்றதொரு தாக்குதலில் 54 படையினர் கொல்லப்பட்டு சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்