அபிவிருத்தி இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தயார்: புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

அபிவிருத்தி இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தயார்: புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

அபிவிருத்தி இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தயார்: புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2019 | 7:52 pm

Colombo (News 1st) ஒரே மண்டலம் ஒரே பாதையில் இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் அபிவிருத்தி இலக்கை சகோதரத்துவத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார்.

மூலோபாய அபிவிருத்தி குழுமத்தின் ஊடாக இரு நாடுகளினதும் மக்களுக்கு சிறந்த பிரதிபலன்கள் கிடைக்கும் என புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடரும் நீண்ட கால நட்புறவை நினைவுபடுத்தியுள்ள சீன ஜனாதிபதி, அது பூகோளமய மாற்றத்தின் போதும் பாதுகாக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக புதிய ஜனாதிபதி எடுக்கும் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்