புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கான கொடி அறிமுகம்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கான கொடி அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2019 | 8:17 pm

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கான கொடி இன்று (18) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடிக்கான முக்கிய தொனிப்பொருளாக வெள்ளை அல்லி மலர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆட்சியாளரின் தூய்மையான ஆட்சியை அது பிரதிபலிக்கின்றது.

வெள்ளை அல்லி மலரின் இதழ்களில் புகழ் மற்றும் சுபீட்சம் வியாபித்துச் செல்கின்றமை பொருட்படுகிறது.

மலரைச் சுற்றியுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற வட்டங்கள் ஆட்சியாளரின் அறிவு மற்றும் உண்மைத் தன்மையை காண்பிப்பதுடன் 4 மூளைகளிலும் உள்ள அரச இலைகள் பௌத்தம் மற்றும் அதன் மூலம் சேத்திற்கு கிடைத்துள்ள வல்லமையை காண்பிக்கின்றது.

இதனைத் தவிர மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான 4 பண்புகளையும் இந்த அரச இலைகள் சித்தரிக்கின்றன.

சர்வதேச தொடர்புகள் மற்றும் உலகின் 4 திசைகளிலும் இருந்து வருகைதரும் விருந்தினர்களுக்கான உபசரிப்பை கொடியின் 4 மூளைகளிலும் உள்ள நாக மலர்கள் எடுத்தியம்புகின்றன.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிபலிக்கும் வகையில் கொடியில் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கொடியின் ஒரே அகலம் கொண்டதாகக் காணப்படுகின்ற வெள்ளைக் கோடு அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை பிரதிபலிக்கின்றது.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, அமைதி மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை ஒரே அகலம் கொண்டாக உள்ள மஞ்சள் கோடு காண்பிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்