புதிய ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2019 | 3:04 pm

Colombo (News 1st) ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி கலந்துரையாடலின் போது, இந்தியாவுக்கு வருகை தருமாறு கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்ததாக இந்திய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு, அமைதி, வளம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் வரலாறு மற்றும் நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டவை எனவும் அதனை வலுப்படுத்த தயாராகவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ ஏற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்