பிரித்தானிய இராணுவத்தின் மீது விசாரணை

பிரித்தானிய இராணுவத்தின் மீது விசாரணை

பிரித்தானிய இராணுவத்தின் மீது விசாரணை

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2019 | 7:11 pm

Colombo (News 1st) போர்க் குற்றங்களை மூடி மறைத்தமை தொடர்பில் பிரித்தானிய இராணுவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், சர்வதேச ஊடகமொன்றின் நிகழ்ச்சியினூடாக வௌிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

பிரித்தானிய இராணுவம் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கும் முதலாவது விசாரணையாக இது அமையவுள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படையினரால் சிவிலியன் கொல்லப்பட்ட விடயத்தை அந்நாடு மூடி மறைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை மிகவும் தீவிரமானவையாகக் கருதுவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்