கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சி.வி. விக்னேஸ்வரன் வாழ்த்து

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சி.வி. விக்னேஸ்வரன் வாழ்த்து

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சி.வி. விக்னேஸ்வரன் வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2019 | 7:04 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவார் என நம்புவதாகவும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுளள்து.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என எடுத்துக் காட்டியிருக்கும் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸ, அனைத்து இன மக்களினதும் அடையாளம், பாரம்பரியம், உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றை பாதுகாக்கும் பொறுப்பையும் தாம் வெகுவாக தம் பால் ஈர்த்துள்ளார் என்பதை உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பார் என எதிர்ப்பார்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்