சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு

சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு

சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2019 | 11:37 am

Colombo (News 1st) இலங்கையின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இன்று (17) முற்பகல் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் சஜித் பிரேமதாச இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

தமது 26 வருட அரசியல் வாழ்க்கையில் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் அவர் தனது அறிக்கையில் நன்றி கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் முடிவையடுத்து தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை காலமும் மக்களுக்கு ஆற்றிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால அரசியல் தொடர்பில் தமக்கு நெருக்கமானவர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்