கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மா விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2019 | 9:00 pm

Colombo (News 1st) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை அதிகரித்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்க முடியாது போனது. திங்கட்கிழமை எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்