கிடைத்துள்ள வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது: அனுரகுமார தரப்பு அறிக்கை

கிடைத்துள்ள வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது: அனுரகுமார தரப்பு அறிக்கை

கிடைத்துள்ள வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது: அனுரகுமார தரப்பு அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2019 | 7:37 pm

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க சார்பில், தேசிய மக்கள் சக்தி ஊடக அறிக்கையொன்றை இன்று வௌியிட்டது.

தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில், ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விடவும் அதிக வாக்குகளை எதிர்பார்த்த போதிலும், அதனை பெற்றுக்கொள்ள முடியாது போனதை ஏற்க வேண்டும் எனவும், விரிவான மக்கள் செயற்பாட்டின் ஆரம்பத்தை உறுதிப்படுத்த முடியாது போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனவாதம் மற்றும் அச்சுறுத்தலுக்கு பதிலாக, தேசிய ஒற்றுமையுடனான தேர்தல் மேடையை உருவாக்குவதற்கு தமது பிரிவினருக்கு முடிந்ததாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

மக்கள் மீதான நம்பிக்கை தோல்வியடைந்துள்ள போதிலும், வெற்றிக்காக அயராது பாடுபடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்