வாக்களிப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள்

வாக்களிப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

16 Nov, 2019 | 8:56 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் லுணுகம்வெஹர – வீரவில அபயபுர ஆரம்ப பாடசாலையில் வாக்களித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று முற்பகல் நுகேகொடை விவேகாராம விகாரையில் வாக்களித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க பஞ்சிகாவத்தை அபேசிங்காராமையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ ஹொரணை வீர மத்தும பண்டார கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஜனசெத பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் பத்தரமுல்லை சூபூதி மகா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

சுயாதீன வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா காத்தான்குடி அல் மீலாத் மகளிர் கல்லூரியில் வாக்களித்தார்.

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ். வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார்.

தேசிய அபிவிருத்தி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ரொஹான் பல்லேவத்த கம்பஹா நூகஹேன விகாரையில் வாக்களித்தார்.

இலங்கை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா பொரலஸ்கமுவ ஆனந்தா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

இலங்கை தொழிலாளர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எஸ்.பி. லியனகே பொரளை, சூசமயவர்தன வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய கொழும்பு 7, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சுயாதீன வேட்பாளர் பியசிறி விஜேநாயக்க யக்கல, செல்வதுகொட சனசமூக நிலையத்தில் வாக்களித்தார்.

சுயாதீன வேட்பாளர் மில்ரோய் பெர்னாண்டோ வென்னப்புவ, கன்னியர் மட ஆரம்ப பாடசாலையில் வாக்களித்தார்.

புதிய சிஹல உறுமய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் மனமேந்திர ஜாஎல, துடெல்ல கிருஸ்துராஜா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

அபே ஜனபல கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சமன் பெரேரா குருணாகல் சாஹிரா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

ஜனநாயக தேசிய இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அருண டி சொய்சா பலப்பிட்டிய கனேகொடெல்ல பாலர் பாடசாலையில் வாக்களித்தார்.

ருஹூனு மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்த டி சொய்சா அம்பலாங்கொடை ஊராவத்த கங்காராம விகாரையில் வாக்களித்தார்.

நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெத்தேகமகே நந்திமித்ர கெஸ்பேவ ஶ்ரீசுதர்ஷன வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆரியவங்ச திசாநாயக்க மொரட்டுவை பள்ளியகொட விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்