ஜனாதிபதி விசேட உரை: தமது ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

ஜனாதிபதி விசேட உரை: தமது ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Nov, 2019 | 6:52 pm

Colombo (News 1st) இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான முறையில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கான விசேட உரையின் போதே ஜனாதிபதி தனது நன்றிகளை குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி தாம் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் தொடக்கம் தமது ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் காணப்பட்ட அபரிமிதமான அதிகாரங்களை தாம் சுயாதீன ஆணைக்குழுக்கள், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திடம் பகிர்ந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஊடக சுதந்திரம் வலுப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக தாம் முன்வைத்த விடயங்களில் இயலுமான விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்