சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2019 | 7:12 am

Colombo (News 1st) இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வாக்காளர்களும் சுதந்திரமாக வாக்களிக்கத் தேவையான சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைதியான தேர்தலொன்றுக்காக, பொலிஸார், முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்தியுள்ளதாக அறிக்கையொன்றின் ஊடாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவையற்ற பிரசாரங்கள் மற்றும் வதந்திகளுக்கு ஏமாறாமல், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குகளை அளிக்குமாறு, அனைத்து வாக்காளர்களிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ள நாட்டில், தமக்கு விருப்பமான நபருக்கு வாக்களிப்பது, பிரஜைகளின் அதிகாரம் மற்றும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்