மடு திருத்தல பிரதேசம் புனித பூமியாக பிரகடனம்

மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனம்

by Staff Writer 15-11-2019 | 4:01 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவமிக்க வணக்கஸ்தலமாகிய மடு தேவாலயத்தை பாதுகாத்து, அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அத்தியாவசியமாகும் என்பதனை உணர்ந்து, இப்பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, திருத்தலத்தை சூழவுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பு தேவாலயத்தின் சமய நடவடிக்கைகளுக்கான கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பாதுகாப்பதற்கும் வர்த்தமானியினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.